Skip to main content

பாச்சலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்... சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

Bachalur girl incident .. CBCID investigation begins!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாச்சலூர் மலை கிராமத்தில் பள்ளி சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல நாட்களாக போலீசார் விசாரித்தும் இதற்கான காரணம் வெளியாகாததோடு, கொலை செய்தவர்களை தற்போது வரை போலீசார் கைது செய்யவில்லை. இது தொடர்பாக பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை வரைபடமாக வரைந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு மண்டல சிபிசிஐடி மூத்த அதிகாரி முத்தரசி தலைமையில், சிபிசிஐடி எஸ்.பி சரவணன், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திலிருந்து சிறுமி இறந்து கிடந்த இடத்தை வரைபடமாக வரைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், சமையலர்கள், சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.