ADVERTISEMENT

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!!

05:51 PM Jul 05, 2018 | Anonymous (not verified)

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொன்டார். தொடர்ந்து அவர் சிறுநீரக மற்றும் தைராய்டு தொந்தரவுகள் அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. தொண்டை வீக்கம் அதனால் சீராக பேச முடியாத சிக்கல்களும் இருந்துள்ளது. இதற்கு நிரந்தரமாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டி முடிவு செய்தது விஜயகாந்த் குடும்பம் அதன்படி அமெரிக்கா மருத்துவமனையை தேர்வு செய்தனர். சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் ஒரு பிரபலமான மருத்துவமனையிடம் அப்பாயின்மென்ட் பெற்றனர் அதன் படி வருகிற 7 ந் தேதி சனிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த் உடன் அவரது மனைவி பிரேமலதாவும் செல்ல இருக்கிறார். மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை என அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் இரண்டு மாதம் தங்க உள்ள விஜயகாந்த் செப்டம்பர் மாதம் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.


ADVERTISEMENT



ADVERTISEMENT

இதற்காகவே தனது கட்சி மா.செ.க்கள், செயற்கு நிர்வாகிகள் கூட்டம் கடந்த 4 ந் தேதி சென்னையில் நடத்தினார். மருத்துவ சிகிச்சை முடிந்து புதுப்பொலிவுடன் கம்பீர குரலுடன் திரும்பி வருவார் என உற்சாகமாக கூறுகிறார்கள் கட்சி நிர்வாகிகள். இது சம்பந்தமாக தே.மு.தி.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேப்டன் மருத்துவ சிகிச்சைக்காக 7 ந் தேதி அமெரிக்கா செல்கிறார் அவரை வழியனுப்ப யாரும் வரவேன்டாம் என கூறியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT