தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு விஜயகாந்துக்கு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் வீடு திரும்பிய நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.