Vijayakanth recovered and returned home

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இதனிடையே விஜயகாந்த் பூரண குணமடையதொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisment