Skip to main content

ஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

vellore district rain water dame issue DMK MLA


'நிவர்' புயல் காரணமாக, வேலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தாலுக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயப் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 

அதேநேரத்தில் பாலாறு உட்பட சிறு நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திராவில் மழை பெய்வதால் பாலாற்றில் அதிகளவு நீர் வருகிறது. விவசாயத்துக்குப் பயன்படும் அளவில் ஆற்று நீரை தேக்குவதற்குத் தேவையான அணைக்கட்டுகள் இல்லாத நிலை மற்றும் பாலாறு உட்பட கிளை நதிகளில் இருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களைச் சீர் செய்யாதது, குடிமராமத்துப் பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் ஏரிகளுக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேறி ஏரிகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் கால்வாய்களைச் சீர் செய்யாததால் அணைக்கட்டுத் தொகுதியில் உள்ள சதுப்பேரி, பொய்கை, செதுவாலை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் செல்லவில்லை.


இதுபற்றி அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க மா.செவுமான நந்தகுமார் கவனத்துக்குச் சென்றது. தற்காலிகமாக தனது சொந்தச் செலவில் அந்தக் கால்வாய்களைத் தூர்வார இயந்திரங்களை வரவழைத்துப் பணிகளைச் செய்துள்ளார் நந்தகுமார். கால்வாய் சீரமைக்கும் பணிகளை உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்க வேண்டுமென அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அதிகாரிகள் பணிகளைச் செய்யவில்லை.

 

இதனால், அதிகாரிகளைக் கண்டித்து, நவம்பர் 30 -ஆம் தேதி குடியாத்தம் – பள்ளிக்கொண்டா சாலையில், தி.மு.க.வினர் 200 பேரோடு மறியலில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ நந்தகுமார். அங்கு வேலூர், பள்ளிக்கொண்டா காவல்நிலைய காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர், எம்.எல்.ஏவிடம் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு எம்.எல்.ஏவுடன் இருந்த தி.மு.க நிர்வாகிகள் கொதிப்படைந்து, மரியாதை கொடுத்து பேசுங்க எனச் சொல்ல, காவல்துறை அதிகாரிகளுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமனாது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து விரைவில் சரி செய்கிறோம் என்றனர். அதன்பின்னர் சாலைமறியலை கைவிட்டனர்.


இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசும்போது, 29 ஆண்டுகளுக்குப் பின்பு மோர்தானா அணை நிரம்பி 10,500 கன அடி நீர் வெளியேறியது. அந்த நீர், கடலில் சென்று கலந்தது. மோர்தானா அணையின் கால்வாய் சீரமைத்திருந்தால், என் தொகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியிருக்கும். ஆனால், அதிகாரிகள் அதனைச் செய்யவில்லை. மழைக்காலத்துக்கு முன்பே நாங்கள் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் எனப் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் பணமில்லை எனச் சொல்லி செய்யவில்லை. பொதுப் பணித்துறையின் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தந்தோம். இந்த அ.தி.மு.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் நீர் வந்திருக்கும், தி.மு.க.வினரான நாங்கள் இப்போது போராட வேண்டியிருக்காது. நான் சொந்தச் செலவில் கால்வாயை சீரமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பெயர் வந்துவிடும் என அதிகாரிகள் தடுப்பது நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்.  

 

cnc

 

கால்வாயைச் சீரமைக்கிறோம் எனச் சாலை மறியலின்போது அதிகாரிகள் கூறினார்களே தவிர, இப்போதுவரை சீரமைக்கும் பணியைச் செய்யவில்லை. இதனால் எம்.எல்.ஏ நந்தகுமார், தனது சொந்த நிதியில் இருந்து தொடர்ந்து கால்வாய் சீரமைக்கும் பணியினை செய்துவருகிறார்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முகசுந்தரத்துக்கும் – அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம், எம்.எல்.ஏ என்கிற முறையில், மக்கள் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொண்டுசென்று தர முயன்றபோது, வாங்காமல் போக்குக் காட்டியவர் கலெக்டர். அதோடு, அதிகாரிகள் சரியாகச் செயல்படாதது குறித்து மேடையிலேயே அமைச்சர் வீரமணி முன்னிலையிலேயே கூறியது, அமைச்சரின் அத்துமீறிய பேச்சை, மேடையிலேயே கண்டித்தது போன்றவற்றால் கலெக்டர் அதிருப்தியாகி, எம்.எல்.ஏ நந்தகுமார் எதாவது செய்யுங்கள் என்றால் செய்யாதீர்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்