Skip to main content

கஜா புயல் - அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : சிபிஐ(எம்) வலியுறுத்தல்

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
cpim



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில்  நடைபெற்றறது.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 

இக்கூட்டத்தில், கஜா புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக தொடர்ந்து அடிக்கடி புயல் வெள்ள பாதிப்புக்குள்ளாகி வரும் கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை இந்த முறையும் பாதிப்புக்குள்ளாகும் என வானிமை மையம் அறிவித்துள்ளது. இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் “அரசு தயார் நிலையில் உள்ளதாக”  அறிவிப்புகள் செய்து வருகின்றனர். 
 

ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் பெருவெள்ளம ஏற்பட்டபோது மக்கள் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதிலிருந்து அமைச்சர்களின் அறிவிப்பு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நானோ புயல், ஒக்கி புயல், வர்தா புயல், 2015ல் ஏற்பட்டபெருவெள்ள பாதிப்பு ஆகியவை மக்கள் மனதில் இந்த அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 
 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு புயல் வெள்ள சேதங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட, வட்ட அளவில் அனைத்துக்கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நடவடிக்கை கைவிடப்பட்டு விட்டது. இது வெறும் அதிகாரிகளை கொண்ட நிர்வாக ஏற்பாடாக மட்டும் நடைபெறுவதால் நிவாரண நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.  
 

புயலும், கடும் மழையும் சேர்ந்து வரும் என்ற நிலையில் அதனால் எற்படும்  பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கோருகிறது.
 

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் முதல் பாம்பன் வரை உள்ள அனைத்து பகுதிக்கும் உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டும். ஏற்படும் மின்துண்டிப்பினை உடனடியாக சரி செய்திட, தேவையான மின்மாற்றி, மின்கம்பங்களை அமைத்திட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலிருந்து தேவையான உபகரணங்களோடு மின் ஊழியர்களை  இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும். அதிக மழை பெய்யும்போது- நீர்நிலைகள் உடையும் ஆபத்து ஏற்படாமலும் அல்லது திடீரென்று அதிக நீரை திறந்து விட்டு வெள்ள சேதம் ஏற்படாமலும் உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் .  புயலால் சாய்ந்து விடும் மரங்களை அப்புறப்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை சரி செய்யவும், ஆபத்தான பகுதியில் உள்ள மக்களை மீட்பதற்கும், மாநிலத்தின் இதர பகுதியிலிருந்து  தீயணைப்பு - பேரிடர் மீட்பு குழுவினரை இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும். 
 

அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கெல்லாம் மக்களை தங்க வைப்பதற்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்திடல், தங்க வைக்கப்படும் மக்களுக்கு மருத்துவம், சுத்தமான குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிட இப்பகுதியில் பொது மையங்களை ஏற்பாடு செய்து உணவு தயாரித்திட வேண்டும்.
 

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மக்களை மீட்கவும், தண்ணீர் வடியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைக்க தனி முகாம்கள் ஏற்படுத்த வேண்டும். மீட்பு  பணிகள் 24 மணி நேரமும் நடைபெறும் வகையில், அதிகாரிகள், ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உட்பட இயற்கையின் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
 

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான பேரிடர் மீட்பு குழு, விமானம், ஹெலிகாப்டர் போன்ற வசதிகளை அளிப்பதுடன் தேவையான நிதியினையும் மத்திய அரசு வழங்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“மோடிக்கு செல்லப் பெயர் வைத்து உள்ளேன்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
I have given a pet name to Modi  Minister Udhayanidhi's speech

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டில் வேனில் இருந்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். மோடி சொல்கிறார் தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பேசி வருகிறார். ஆமாம் தூக்கம் போய் விட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. உங்களை ஆட்சியிலிருந்து அகற்றாமல் நாங்கள் தூங்கப் போவதில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நமது வேலை ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கை செலுத்தி மோடிக்கு தலையில் மிகப்பெரிய கொட்டு வைத்தாக வேண்டும். வைப்பீர்களா?

கடந்த 10 வருடமாக நரேந்திர மோடி அவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து உள்ளேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நமது முதல்வர்களும் பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன். மிஸ்டர் 28 பைசா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு பக்கம் தலை வைத்து பார்த்ததில்லை. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது மதுரைக்கு வந்து ஒரே ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக கூறினார். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தேர்தல் வந்ததும் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் புயல் அடித்தபோது வரவில்லை. கடந்த டிசம்பர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புயல் வெள்ளம் வந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் நின்று மக்கள் பணி செய்தனர். ஆனால் ஒன்றிய பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். எல்லாத்தையும் பார்த்துவிட்டு காசு தருகிறேன் என கூறினார். ஆனால் முதலமைச்சர் தார்மீக உரிமையில் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன பணம் கொடுக்கிற மெஷினா என்ன கேள்வி கேட்டார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், புயல் வந்த போதும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என எங்களை கேள்வி கேட்டார். அதற்கு நான் திருப்பி கேட்டேன். இது உங்க அப்பன் வீட்டு பணமா...இது எங்கள் வரிப்பணம் என்று. இது தவறு என்றார். தமிழகத்துக்கு வெள்ளம், புயல் வந்தபோது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் ஓடி ஓடிவருகிறார். தேர்தல் வந்ததால் தமிழகத்தை சுற்றி வருகிறார். பாசிச ஆட்சியை விரட்டும் வரை நாம் அனைவரும் தூங்கக் கூடாது”எனப் பேசினார்.