ADVERTISEMENT

லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.வுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை! 

12:44 PM Apr 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011- ஆம் ஆண்டு கரூர் மாவட்டம், தென்னிலை தெற்கு கிராம நிர்வாக அலுவலராக வசந்தி என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில், அவரிடம் விஜயலட்சுமி என்பவர் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் வசந்தி ரூபாய் 3,000 லஞ்சம் கேட்டதால், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கிய போது, வசந்தி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டு வந்த வசந்திக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT