haryana gurugram money in road viral video 

Advertisment

கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இளைஞர் ஒருவர் மேம்பாலம் ஒன்றில் நின்று கொண்டு கீழே இருந்த மக்களை நோக்கி பணத்தை வாரிஇறைத்தவீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அதே போன்று மற்றொரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஹரியானாமாநிலம் குருகிராமில் உள்ள சாலை ஒன்றில் ஓடும் காரிலிருந்து ஒருவர் ரூபாய்நோட்டுகளை அள்ளி வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா போலீசார்வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.