Emu chicken INCIDENT 10 years in jail for one!

Advertisment

ஈமு கோழி நிறுவனத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த ஈரோட்டைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்களை அறிவித்து, விளம்பரம் செய்து முதலீட்டாளர்களைக் கவர்ந்து வந்துள்ளனர். ஆனால் ஒப்பந்த காலம் முடிவதற்குள் முன்பாகவே, பணத்தைத் திருப்பித் தராமல் 140 முதலீட்டாளர்களிடம் 5 கோடியே 56 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒருவரான சென்னிமலையைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர், கடந்த 2013- ஆம் ஆண்டு புகார் கொடுத்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஏமாற்றிய செல்வக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளநிலையில், வழக்கில் சேர்க்கப்பட்ட மற்ற நான்கு பேர் விடுதலைசெய்யப்பட்டனர்.