ADVERTISEMENT

லாரி எரிப்பு: அதிமுக முக்கிய பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு! 

11:28 AM Apr 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக ஒப்பந்ததாரர் லாரி எரிக்கப்பட்ட சம்பவத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் திருச்சி சாலையில் தோரணங்கள்பட்டி அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற தனியார் நிறுவன லாரி ஒன்று மர்ம ஆசாமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், லாரி டிரைவர் உட்பட 2 பேர் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவன சூப்பர்வைசர் கிருஷ்ணமூர்த்தி (33) தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்


அந்த புகாரில், கடந்த 9ந் தேதி லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு பவித்திரம் பகுதியில் இருந்து புலியூர் நோக்கி சென்று கொண்டிந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டினார். லாரி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி பிரிவு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத 3 நபர்கள் லாரியை நிறுத்தினர். அப்போது 2 கார்களில் பலர் வந்தனர். என்னையும் டிரைவர் அன்பழகனையும் லாரியிலிருந்து கீழே இறக்கி, மிரட்டி, அடித்து உதைத்தனர்.


பின்னர் தானேஷ் என்கிற முத்துகுமார் (மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்) என்பவருக்கும் நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளருக்கும் உள்ள வியாபார பிரச்சனையில் அவரும், திருவிக (மாவட்ட ஊராட்சி அதிமுக கவுன்சிலர்) என்பவரும் லாரியை பெட்ரோல் ஊற்றி எரித்தனர் என புகாரில் கூறியுள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் ஆய்வாளர் செந்தில்குமார், தானேஷ் என்கிற முத்துகுமார், திருவிக, மதுசூதனன் (கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்), கமலக்கண்ணன் (மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்), நெடுஞ்செழியன் (கரூர் நகர அதிமுக செயலாளர்) மற்றும் பலர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


லாரி எரிப்பு சம்பவத்தில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT