Skip to main content

சொல்லி அடித்த செனா.பானா ? 

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
sb

 

அதிமுகவில் தனக்கு கிடைத்த சின்ன வாய்ப்பை பயன்படுத்தி தன் எதிரே உள்ள தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் உதவியுடன் அதே தி.மு.க. கட்சியில் தனக்கு எதிரே போட்டியிட்டவரை மண்ணை கவ்வ வைத்த அதே தி.மு.க. கட்சியில் மாவட்ட செயலாளர் ஆகி இருக்கிறார் செனா.பானா. அதென்ன செனா.பானா. அதான் செந்தில்பாலாஜி.

 

கரூர் பகுதியில் செந்தில்பாலாஜியின் எதிர் அரசியல் செய்யும் எல்லோரும் சொல்லும் வார்த்தை செனா.பானா என்பது தான். அ.தி.மு.க.வில் அசுர வேகத்தில் வளர்ந்து ஆட்சியின் உச்சத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமாகி சகல வல்லமை பொருந்தியவராக வளம் வந்தவர் செந்தில்பாலாஜி. அதே ஆட்சியில் அமைச்சராக இருக்கும் போதே அதே கட்சியில் தன்னை வீழ்த்துவதற்கு அனைத்து வேலையும் கட்சி தலைமையே பண்ணுகிற நேரத்தில் தன்னுடைய அசுர தனமான அரசியல் வேலையில் ஜெயித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டு எதிர் கட்சியான தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு இணைந்து அப்படியே நின்று விடாமல் மாவட்ட பொறுப்பாளர் பதவியை குறித்து தன் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பிரமாண்டமாகத் தான் எம்.எல்.ஏ-வாக இருந்த அரவக்குறிச்சி தொகுதி எல்லைக்குள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்து இரண்டு ஊராட்சி சபைக் கூட்டங்கள், ஒரு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தி தி.மு.க. ஸ்டாலினை ஆச்சரியப்பட வைத்து அவரிடம் நல்லபெயர் வாங்கினார். 

 

இதை நாம் நக்கீரன் இணையத்தில் ஸ்டாலின் சொன்னதை கணகட்சிதமாக செய்து முடித்து பாராட்டு வாங்கிய செந்தில்பாலாஜி! என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் கரூரில் உள்ள முக்கிய கட்சியினர் சிலர் ஸ்டாலிடன் கரூர் தி.மு.க. ரொம்ப தொய்வாக இருக்கிறது என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஸ்டாலினோ அமைதியாக சிரித்திருக்கிறார். 

ஆனால் சென்னைக்கு சென்றவுடன் மாவட்ட பொறுப்பாளர் பதவி அறிவித்தவுடன் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். தற்போது தி.மு.க.வில் சில முக்கிய நிர்வாகிகளும் கொஞ்சம் அரண்டு போய் தான் இருக்கிறார்கள். 

 

செந்தில்பாலாஜி,  வரும் எம்.பி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் வாங்கி எம்.பி. வேட்பாளரை ஜெயிக்க வைத்து, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளரை ஜெயிக்க வைத்து தன்னை விட்டு சென்ற அமைச்சர் பதவியை மீண்டும் வாங்க வேண்டும் என்று குறி வைத்து காய்நகர்த்தி வருகிறார் என்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்