ADVERTISEMENT

திருச்சி நகைக் கொள்ளையில் அடுத்தடுத்து நகைகள் மீட்க காரணமாக இருந்த கொள்ளையரின் அம்மா!

03:07 PM Oct 14, 2019 | rajavel

ADVERTISEMENT

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ஆம் தேதி அதிகாலை உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரத்தை அள்ளிச்சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

ADVERTISEMENT



திருவாரூரைச் சேர்ந்த கொள்ளையர்களான முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி சுரேஷின் தாய் கனகவள்ளி மற்றும் மணிகண்டன் ஆகியோரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்னிலையில், போலீஸார் ஆஜர்படுத்தினர்.

திருவாரூர் போலிசுக்கு கண்ணில் மண்ணை தூவி தப்பியோடி சுரேஷை கண்டுபிடிக்க திருச்சி தனிப்படை போலீசார் தவியாய் தவித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சியில் உள்ள டி.சி. மயில்வாகணன் கொள்ளையன் சுரேஷ் தாயார் கனகவள்ளியை வீட்டில் இருந்து அழைத்து வந்து விசாரித்துக்கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல் விசாரித்து விட்டு விடுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் கனகவள்ளி மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கு பிறகுதான், அதுவரை தலைமறைவாக பெங்களுரில் இருந்த சுரேஷ் கடந்த 10 ஆம் தேதி காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். அதற்கு அடுத்த நாள் பெங்களூருவில் முருகன் சரண் அடைந்தான். அதேபோல், லலிதா ஜூவல்லரி திருட்டு வழக்கில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 13.10.2019 கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த லலிதா ஜுவல்லரியில் திருடப்பட்ட சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

முருகன் திருச்சியில் தங்கிய வீடு, முருகன் பெங்களுரில் சரண்டர் என்று பல நாட்களாக நீடித்துக்கொண்டிருந்த கொள்ளை சம்பவத்திற்கு ஒரு வழிகிடைத்தது. கைது தொடர்கிறது என்கிறார்கள் தனிப்படையினர்.

கொள்ளையன் முருகன் அளித்த தகவலின்படி திருவெறும்பூர் எல்லைக்குட்பட்ட பூசதுறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 10 ஆம் தேதி காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்பு சுரேஷ் சரணடைந்தார். இதையடுத்து நீதிபதியின் உத்தரவுபடி சுரேஷ் 5 நாள் திருச்சி மத்திய சிறை காவலில் அடைக்கப்பட்டார்.


5 நாள் சிறைக்காவல் முடிந்து சுரேஷ் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து திருச்சி தனிப்படை காவல்துறையினர் சார்பில் இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் 15 நாள் சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தார். அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸுக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.


.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT