கடந்த 2 ஆம் தேதி திருச்சியில் உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் சுவற்றை துளையிட்டு 13 கோடி மதிப்பீட்டில் உள்ள நகை,வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனையும், அவனது அக்காமகன் சுரேஷ்யும் தேடி வருகிறது காவல்துறை. கொள்ளையடிக்கப்பட்ட நகையோடு பிடிபட்ட திருவாரூர் அதிமுக பிரமுகரின் மகனும், சசிகலா சகோதரர் திவகரனின் ஆதரவாளருமான மணிகண்டனையும், முருகனின் அக்கா கனகவள்ளி உள்ளிட்டோரை முதற்கட்டமாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிறகு 6 ம் தேதி மாலை முருகனின் அண்ணன் மகன் முரளியோடு மற்றொருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்துபெறப்பட்ட தகவலின்படி திருவாரூரை சேர்ந்த மாறன் என்கிற திருமாறனை போலீசார் விசாரணை செய்தனர்.

thiruchy robbery case.. police arrest admk person

மாறன்

Advertisment

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், "திமுகவின் முன்னாள் நகர செயலாளர் இரா.சங்கரின் அண்ணன் திருமாறன் என்கிற மாறன். இவர் பஜனைமட தெருவில் கடைசியாக உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். ஆகையால் பலரையும் விசாரித்து வருகிறோம். அந்த வகையில் இவரையும் விசாரித்து அனுப்பிவிட்டோம் என்றனர்.