ADVERTISEMENT

கறிக்காக நரிக்கு நாட்டு வெடி குண்டு... 12 பேர் கொண்ட கும்பல் கைது!

03:44 PM Jun 09, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கேரளாவில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்தது போன்று திருச்சியில், இறைச்சியில் வெடி வைத்து நரி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT


இந்தப் பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இடமாகும். அதனால் மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனஉயிரினங்கள் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, இந்த வயல் பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. மேலும் விளைபொருட்களை அவை சாப்பிட்டுவிடுவதாகவும், பயிர்களை நடமாடியே நாசம் செய்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக வனத்துறையினருக்கு ஒருசிலர் தொடர்ந்து புகார்களும் அளித்தனர். அதனால் வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஜீயபுரம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 12 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து வாய்க் கிழிந்த நிலையில் இருந்த நரியை மீட்டனர். அவர்களிடம் போலிசார் தொடர் விசாரணையில் இறைச்சியில் வெடிவைத்து நரி வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட 12 பேரும், இறந்து கிடந்த நரியை எடுத்துச் சென்றதாகக் கூறி வருவதாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.


இவர்கள் எல்லாருமே திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியைச் சேர்ந்த ராம்ராஜ், சரவணன், ஏசுதாஸ், சரத்குமார், தேவதாஸ், பாண்டியன், விஜயகுமார், சத்தியமூர்த்தி, சரத்குமார், ராஜமாணிக்கம், ராஜூ, பட்டம்பிள்ளை ஆகியோர் என்பது தெரியவந்தது.

திருச்சி குழுமணி அருகே வெடி வைத்து நரியை வேட்டையாடிய வழக்கில் 16 மீது வழக்குப் பதிவு. அதில் 12 பேர் கைது. 4 பேர் தலைமறைவு இதில் வெடிமருந்து வாங்க உடந்தையாக இருந்த வனத்துறை அதிகாரிகளிடம், போலீசார் ரகசிய விசாரணை.


இதனைத் தொடர்ந்து உதவி வனப்பாதுகாவர் அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT