ADVERTISEMENT

திருச்சியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம்; அமைச்சர்கள் பங்கேற்பு 

05:18 PM Aug 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் திருச்சியில் இன்று(12.8.2022) நடந்தது . மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி நடத்திய இந்த கருத்தரங்கில் வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமய மூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், "வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம். இத்திட்டத்தில் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மூன்று சதவீதம் வட்டி குறைப்புடன் கடன் பெறலாம்" என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT