education minister Anbil Mahesh Poyyamozhi issued appointment orders

Advertisment

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (29.10.2022) லால்குடி கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளைதொடங்கி வைத்துநூலகத்தை பார்வையிட்டு, நூலகங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த மூன்று பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தர பாண்டியன், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கே. நந்தகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், பொது நூலக இயக்குநர் க. இளம்பகவத், இணை இயக்குநர் பொது நூலகம் கூடுதல் பொறுப்பு அமுதவல்லி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், மாவட்ட நூலக அலுவலர் அ. பொ. சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.