minister initiated the vocational training for the 11th and 12th students

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதிருவெறும்பூர் பாரத் பெல் நிறுவன தொழிற்சாலை பணிமனையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பதோடு தகவல் அறிந்துதொழில் தேர்வு செய்யவும், தொழில் முனைவோர் மனநிலையை அபிவிருத்தி செய்யும் வகையிலும் தொழிற்கல்வி உள்ளுறை பயிற்சியை இன்று(29.10.2022) தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில்பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இ.ஆ.ப, தொழிற்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கே.என்.சேகரன், துவாக்குடி நகர்மன்றத் தலைவர் காயம்பு, மாவட்ட ஊராட்சித்துணைத் தலைவர் கே.எஸ்.எம்.கருணாநிதி, பாரத் பெல் நிறுவன உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment