ADVERTISEMENT

வேலூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் டி.ஆர்.பாலு. - அதிமுகவில் ரெடியாகும் பட்டியல்

03:18 PM Jul 10, 2019 | Anonymous (not verified)


நிறுத்திவைக்கப்பட்டுயிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீலை 11 ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 18ந்தேதி முடிவுற்று ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு எண்ணிக்கை நடைபெற்று, ஆகஸ்ட் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT


இந்த தொகுதியில் முன்பு போட்டியிட்ட அதே வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்கள்.

ADVERTISEMENT


இந்நிலையில் ஏ.சி.சண்முகத்துக்காக இந்த தொகுதிக்கான தேர்தல் பணி மேற்பார்வையாளர்களாக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் செய்யவுள்ளார்கள் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதன்படி கட்சியின் முதன்மை செயலாளரும், திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், வேலூர் மா.செக்கள் காந்தி எம்.எல்.ஏ, நந்தகுமார் எம்.எல்.ஏ, முத்தமிழ்செல்வி போன்றவர்களை நியமித்துள்ளது. அதோடு 6 சட்டமன்ற தொகுதியிலும் எந்தந்த மாவட்டம் எந்தந்த தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்கிற பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் களம்மிறங்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த தொகுதியின் வெற்றி திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் பெரும் மானப்பிரச்சனையாக உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதித்துள்ளது. ஒரேயிடத்தில் மட்டும்மே வெற்றி பெற்றதால் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என நொந்துப்போய்வுள்ளனர் அதிமுகவினர். இந்த வேலூர் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவில் அதிமுகவுள்ளது.


இதனால் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும்மென இரண்டு கட்சிகளும் தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்க முடிவு செய்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT