dmk drbalu mp press meet at delhi

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். மேலும் மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினர்.

Advertisment

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, "மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என பிரதமர் கூறினார். தான் கூறியதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்குமாறும் பிரதமர் மோடி கூறினார்"இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கோரி ஏற்கனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment