ADVERTISEMENT

''கோவையில் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா''-கமல் பேட்டி!

11:30 AM Apr 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கோவை தெற்கில் போட்டியிடும் கமல்ஹாசன் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து கமல் கூறியுள்ளதாவது,''கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. டோக்கன் வழங்கியது தொடர்பான நகல் என்னிடம் உள்ளது.இது குறித்து புகாரளிக்க உள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT