தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கமல்ஹாசன், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, கடந்தநவம்பர்மாதமேமுதற்கட்ட பிரச்சாரத்தைமதுரையில்தொடங்கி, தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று (03.03.2021) சென்னை ஆலந்தூரில் இருந்து இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரசுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னைஆலந்தூர் மெட்ரோரயில் நிலையத்தின் அருகே இரண்டாம்கட்ட பிரச்சாரத்தைத் துவங்க இருக்கிறார் மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன்.