Release of MNM Second Candidate List

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

Advertisment

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம்கட்டவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை தெற்கு - கமல்ஹாசன், ஆலந்தூர் - சரத்பாபு, தி.நகர் - பழ.கருப்பையா, மயிலாப்பூர் - ஸ்ரீப்ரியா, கன்னியாகுமரி (எம்.பி தொகுதி) - சுபா சார்லஸ், எடப்பாடி - தசாப்பராஜ், சிங்காநல்லூர் - மகேந்திரன் என பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாகபோட்டியிட இருக்கிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment