Kamal contest constituency ... MNM second phase list to be released

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

Advertisment

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சித்திர ஹோட்டலில், கடந்த 10/03/2021 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (12.03.2021) இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். இதில்கமல் போட்டியிடும் தொகுதி குறித்து தகவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment