ADVERTISEMENT

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த தொழிலாளிகள் தர்னா

09:29 PM Nov 19, 2018 | selvakumar

ADVERTISEMENT

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பெண் ஒப்பந்த தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசி தாக்க முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப்பணி, காவலாளிபணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏராளமான ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் சிலர் பெண் ஒப்பந்ததொழிலாளர்கள் இடம் தண்ணீர்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தொழிலாளர்களை தகாத வார்த்தையில் பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தகாத வார்த்தையில் பேசி தாக்கமுயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்குவந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


மேலும் போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றோம். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT