Skip to main content

’பயிரெல்லாம் கருகலையா...சும்மா வதந்திய கிளப்புறாங்களா....?’- அமைச்சர் காமராஜை விளாசும் விவசாயிகள்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
theni

 

கடைமடை பகுதிகளில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனால் நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேட்டூர்அணை எந்த ஆண்டும் நிகழாத வகையில்   நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது இருந்தபோதிலும் டெல்டா மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு  போதுமான தண்ணீர் வந்து சேராத காரணத்தால், நேரடி நெல்விதைப்பு செய்த நெற்பயிர்கள  முற்றிலுமாக கருகி வருகின்றனர். 

 

thirumavalavan

 

இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிரை காப்பாற்ற முக்கொம்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நாகையை அடுத்த சிக்கலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அச்சங்கத்தின் மாநில பொதுசெயலர்  சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது, கடைமடைக்கு விரைந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், வாய்க்கால்களை முறையாக தூர்வாராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 

 

பின்னர் அரசு அதிகாரிகள் நடத்திய நீண்ட நேரபேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிகொண்டனர். தொடர்ந்து முறையின்றி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடவும், கூடுதல் தண்ணீர் திறக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

விவசாயிகளின் போராட்டத்தால் நாகை முதல் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

நாகை திருவாரூர் சாலையில் போராட்டம் நடந்துவந்த அதே நேரத்தில், உணவு அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து வர்த்தகர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பத்திரிக்கையாளர்களும், வர்த்தகர்களும் சமுக ஆர்வளர்களும் காமாராஜிடம், "சம்பா பயிர்கள் கருகிவருகிறதே, தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளக்கூடாதா ? விவசாயம் செழித்தால் தானே எங்களுக்கு வியாபாரம் நடக்கும் வர்த்தகம் செழிக்கும் என்றனர்.

 

அதற்கு பதிலளித்த காமராஜ் ,  பயிரெல்லாம் கருகல, சும்மா வதந்திய கிளப்புறாங்க, என்றார். வதந்தி என்றால் திருவாரூர் நாகை சாலையில் நடந்த போராட்டம் எதற்காக வதந்திக்காகவா, போராடத்தில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தது வேலை வெட்டியில்லாமலா அமைச்சர் பதில் கூறனும் "என்கிறார் திருவாரூர் விவசாய சங்க தலைவர் மாசிலாமணி. 

 


 

சார்ந்த செய்திகள்