ADVERTISEMENT

திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வாய்ப்பு யாருக்கு?

11:26 AM Jan 11, 2020 | Anonymous (not verified)

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில் தோ்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் 6 ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்ற நாளில் ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர்களை கடத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்கட்சிகளுக்குள்ளேயே மோதல்கள் நடந்து முடிந்துள்ளது. ஜனவரி 11 ந் தேதி ஒன்றிய சேர்மன், மாவட்டச் சேர்மன் மறைமுகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சங்களை கையில் வைத்துக் கொண்டு கவுன்சிலர்களை கடத்தி சொகுசு வாழ்க்கையில் தள்ளி உள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான இடங்களில் தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் காட்சிகள் மாறும் வாய்ப்புகளை உருவாக்கி உள்ளனர். இதற்காக இனப்பிரிவுகள் முன்னால் வந்து கொண்டிருக்கிறது. திருவரங்குளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 வார்டுகளில் 17 வார்டுகளை தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க சேர்மன் தான் அமர முடியும். ஆனால் தி.மு.க விற்குள்ளேயே யார் சேர்மன் என்ற யுத்தம் 6 ந் தேதியே தொடங்கி மேற்கு ஒ.செ தங்கமணி – கிழக்கு ஒ.செ ஞான.இளங்கோவன் தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் கவுன்சிலர்கள் கடத்தல் சம்பவமும் நடந்து கட்சித் தலைமை வரை பஞ்சாயத்தும் சென்றுள்ளது.



இந்த நிலையில் தான் உடன்பிறப்புகள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதத் தொடங்கி உள்ளனர். அதில், திருவரங்குளம் ஒன்றியத்தில் 25 வார்டுகளில் கிழக்கு ஒன்றியத்தில் 13 வார்டுகளும், மேற்கு ஒன்றியத்தில் 12 வார்டுகளும் உள்ளது. இதில் அந்தந்த ஒன்றியச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக இருந்து தேர்தல் பணி செய்தனர். வேட்பாளர் தேர்விலேயே மேற்கு ஒன்றியம் கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்ற சி.பி.எம். மா.செ கவிவர்மன் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி இருந்தார். அதாவது சி.பி.எம். க்கு வார்டு ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் தி.மு.க பிரமுகருக்கு பணம் கொடுத்து சுயேட்சையாக நிற்க வைத்துள்ளார் என்பதே அந்த குற்றச்சாட்டு. இது ஒரு பக்கம் விசாரனை நடக்கிறது. மற்றொரு பக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஞான.இளங்கோவன் 11 வார்டுகளில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துவிட்டார். ஆனால் மேற்கு ஒன்றியத்தில் 12 வார்டுகளில் 6 வார்டுகளை மட்டுமே தி.மு.க கூட்டணி கட்சியினரால் கைப்பற்ற முடிந்தது.

இந்த நிலையில் தான் அதிக வார்டுகளில் வெற்றியை பெற்றுள்ள எங்கள் ஒன்றியத்தில் சேர்மன் வேட்பாளர் வேண்டும் என்று கிழக்கு ஒ.செ கட்சி தலைமையிடம் கேட்டுள்ளார். அதுதான் சரி என்று கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் தான் தி.மு.க விற்குள் குழப்பம் ஏற்படுத்த நினைத்த மணல் மாஃபியாக்கள் மேற்கு ஒன்றியத்தில் உள்ள தி.மு.க வினரை கிளப்பிவிட்டு சேர்மன் வாய்ப்பை கேட்டு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இதனால் முடிவெடுக்க வேண்டிய மாவட்ட தி.மு.க நிர்வாகம் எதையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது கிழக்கு ஒன்றியத்திற்கு சேர்மன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதிர் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தி.மு.க வுக்கு எதிரான நிலை உருவாகும் என்று சொல்கிறார்கள். எப்படியோ தி.மு.க வில் குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகள் வரை ஒன்றாக இருந்த ஒ. செக்களை அடிதடி வரை இறக்கிவிட்டு பிரித்துவிட்ட சந்தோசத்தில் மணல் மாஃபியாக்க உள்ளனர். இதை கட்சி தலைமை, மாவட்டத் தலைமையும் கவணிக்காவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT