ADVERTISEMENT

 எர்ணாகுளம் விரைவு ரெயிலை மறித்து திருவாரூரில் போராட்டம்

06:47 PM Jan 08, 2019 | selvakumar

ADVERTISEMENT

மக்கள் விரோத கொள்கைகளை அமுலாக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் அருகே எர்ணாகுளம் விரைவு ரெயிலை மறித்து விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அகில இந்திய அளவில் இன்று 8ம்தேதியும் நாளை 9 ம் தேதியும் பொதுவேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. அதன் படி இன்று இந்தியா முழுவதும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட கொரடாச்சேரி ரயில்நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 100நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும், தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியமாக ரூ3ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எர்ணாகுளத்திலிருந்து காரைக்காலுக்கு சென்ற விரைவு ரெயிலை மறித்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT