திருவாரூர் அருகே திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சிமன்ற தலைவர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர், காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பெற்றிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட18 புதுக்குடி ஊராட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திவ்யா (24) என்கிற இளம் பொறியியல் பட்டதாரி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

incident in thiruvarur...

இந்தநிலையில் நேற்று ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக சுயேச்சை வேட்பாளர் உதயகுமார் என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். அவரை அதிமுகவினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவ்யா மீது அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், அவரது மகன் அழகர் உள்ளிட்ட 5 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதோடு சம்பவத்தின்போது அருகேயிருந்த திவ்யாவின் சகோதரர் ராஜேஷ்கண்ணன் மீதும் தாக்குதல் நடத்தினர். தகராறில் காயமடைந்த இருவரையும் குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

incident in thiruvarur...

இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்டதரப்பினர். புதிதாக பதவியேற்ற இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.