kk

திருவாரூர் அருகே விளைநிலங்களின் வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல ஐஓசி நிறுவனம் சார்பில் இறக்கப்பட்ட குழாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கடந்த 2012ம் ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு கழகம் எடுக்கும் கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷசன் நிறுவனம் திருச்சி வரை கொண்டு செல்ல முடிவு செய்து விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியதையடுத்து ஐஓசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்தக் கொண்டது.

Advertisment

இந்நிலையில் திருவாரூர் அருகே ஐஓசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சொரக்குடி, மூங்கில்குடி, மூலங்குடி, காக்க கோட்டூர், ஓமக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களில் ஐஓசி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று நள்ளிரவு காவல்துறையினர் துணையுடன் உமாதேவி என்பவரது சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளை நிலத்தில் குழாய்கள் இறக்கியுள்ளது ஐஓசி நிறுவனம்.

இதனையறிந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள், குழாய்கள் இறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதி வழங்கவில்லை. அத்துமீறி குழாய்களை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இறக்கி உள்ளனர். அந்த குழாய்களை உடனடியாக விளைநிலங்களிலிருந்து அகற்ற வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி குழாய் பதிக்க முற்பட்டால் கடுமையான போராட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment