ADVERTISEMENT

தமிழகம் திரும்பிய சசிகலா...  ஒசூர் முழுவதும் 2000 போலீஸார் குவிப்பு!

10:33 AM Feb 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வந்தார். ஜனவரி 27 அன்று விடுதலையான சசிகலா, கரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, சசிகலா உறவினரான இளவரசியும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சசிகலா இன்று தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தன. அந்தவகையில், தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் அமமுகவினர் சார்பில் கொடி, தோரணங்கள், பதாகைகள், மேள தாளங்களுடன் தயாராக இருந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

ஒசூர் மாநகரின் 4 இடங்களில் அமமுக சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது, இதற்காக ஒசூர் முழுவதும் பாதுகாப்பு 2000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT