
அமைச்சர் சி.வி.சண்முகம் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி தமிழகத்தில் சமூககலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். எனவேஅமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி காவல்நிலையத்தில் அமமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்சமூகரீதியான வாக்குகளை பெற நினைத்து, அதற்காக மற்றொரு சமூகத்தை இழிவாக பேசியபடி அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அமைச்சர் சண்முகத்தின் பேச்சு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருவதாக சமூகம்,மதங்களை கடந்து பல்வேறு தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். மேலும் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கவேண்டு மென்றும் தமிழக ஆளுநருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பேச்சு என்பதுசமூகமோதலை ஏற்படுத்தி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்றும், இதற்கு பின்புலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை நிற்பதாகவும், அமைச்சர் சி.வி. சண்முகம் தனது பதவிப் பிரமான உறுதிமொழியினை மீறியுள்ளதாகவும், அமைச்சர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கு.சீனிவாசன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வழக்கறிஞர்கள் அமிர்தராஜ், ஆனந்தராஜ், சிவசுந்தர் உள்ளிட்ட பலரும் மன்னார்குடி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)