ADVERTISEMENT

‘தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம்

01:14 PM Oct 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 9- ஆம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT