ADVERTISEMENT

நாசா வழங்கிய பயிற்சியில் குறுங்கோள்களைக் கண்டுபிடித்த தமிழ்நாட்டு மாணவர்கள்! 

10:12 AM Mar 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அறிவியல் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்காக நாசா வழங்கும் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியில் கலந்துகொண்ட தமிழக பள்ளி மாணவர்கள் 24 குறுங்கோள்களை கண்டு பிடித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆற்றலை வளர்த்து அவர்கள் எதிர்காலத்தில் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற நோக்கில் குறுங்கோள்களை கண்டுபிடிக்கும் பயிற்சியை இணையத்தின் வாயிலாக நாசா வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த பயிற்சியை தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தெரிந்து கொண்டு பலன் பெறும் வகையில் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு வான் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை குழுமம் மற்றும் தேசிய அறிவியல் வார குழுமம் இணைந்து அளித்து வந்தது. இந்நிலையில் தேசிய அறிவியல் வார விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இணையத்தின் வாயிலாக பயிற்சி பெற்று 24 குறுங்கோள்களை கண்டுபிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விண்வெளி மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஆர்வம் உள்ள தங்களுக்கு இதுபோன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும் குறுங்கோள்களை கண்டுபிடித்த போது தாங்கள் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் போல் உணர்ந்ததாகவும் மாணவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT