ADVERTISEMENT

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆசிரியைகள்

11:19 AM Apr 29, 2019 | rajavel

ADVERTISEMENT

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகளில், மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97% பேர் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.


தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி மாணவிகள் மதிபெண்கள் தெரிந்ததும் தோழிகளுடன் மகிழ்ச்சியை கொண்டாடினர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு இனிப்புகளை கொடுத்து ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT