ADVERTISEMENT

தென்மேற்கு பருவக்காற்று வலுப்பதால் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

07:47 PM Jun 07, 2018 | vasanthbalakrishnan

கடந்த சில மாதங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று பரவலாக மழை கொட்டித்தீர்த்தது இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுவதாலும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் கடலோர பகுதியில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்புள்ளது என்று கூறினார். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

ADVERTISEMENT



மேலும் தமிழகத்தை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதாக குறிப்பிட்டார். அதில் அதிகபட்ச மழைப்பதிவு: வேலூர் 9 செ.மீ ஆகவும் கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் 7 செ.மீ.ஆகவும் நரிமணம், செய்யூர் மற்றும் காஞ்சிபுரத்தில் 6 செ.மீஆகவும் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ ஆகவும் மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT