ADVERTISEMENT

சாத்தான்குளம்: மூன்று நாள் சிபிஐ விசாரணை முடிவு... நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!

05:21 PM Jul 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் உள்ளிட்ட ஐந்து பேரும், சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் சிபிஐ காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT

முன்னதாக மூன்று நாட்கள் சிபிஐ காவலில் செல்ல மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டதோடு, ஐந்து பேரையும் 16ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகிய இருவரையும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பல்வேறு கட்ட விசாரணைகள் கலவர்களிடம் நடைபெற்றது. இன்றுடன் மூன்று நாள் சிபிஐ காவல் முடிவடையும் நிலையில், காவலர்கள் ஐந்து பேருக்கும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் ஆகிய 4 பேரை மேலும் 15 நாட்கள் (ஜூலை 30 வரை) மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். காவலர் முத்தராஜிடம் மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த சிபிஐ கேட்டுக்கொண்டதின் பேரில், அவரை தவிர மற்ற நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT