sathankulama incident cbi

Advertisment

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸாரால்சித்திரவதை செய்யப்பட்டுஉயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்து வரும் இது சம்பந்தமான வழக்கில் சி.பி.ஐ இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய தடயவியல் குழு தற்போது நடிகர்சுஷாந்த் மரணம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் நிலையில், அக்டோபரில் சாத்தான்குளம் வழக்கைஅதே தடயவியல் குழு ஆய்வு செய்ய இருப்பதாகசி.பி.ஐ நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சித்திரவதை கொலைகள் தொடர்பாக சி.பி.ஐ,சி.பி.சி.ஐ.டி தரப்பில் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.