
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீசாரின்சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்குசி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு அவர்களின் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சி.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் காவலர் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உயர்நீதிமன்றகிளையில் ஜாமீன் தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் வழக்கு மீதான விசாரணையில் சி.பி.ஐ இந்தத் தகவலைநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. உயிரிழந்த பென்னிக்ஸின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ஜெயராஜின் உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
முன்பாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இருக்கும் பொழுது இது தொடர்பாக 60 பேர்விசாரிக்கப்பட்டதாகவும், வழக்கு சி.பி.ஐக்குமாற்றப்பட்டபின்35 பேரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளது சி.பி.ஐ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)