ADVERTISEMENT

'சந்தன ஆயில்', 'சந்தன சோப்பு' தயாரிக்க வெட்டிக் கடத்தப்படும் சந்தன மரங்கள்!

10:27 PM Oct 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT


சந்தன ஆயில் மற்றும் சாண்டல் சோப்புகள் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது சந்தனம். இதற்காக சந்தன மரங்கள் வளர்க்கப்படுவது உண்டு. சந்தன மரங்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வனங்கள் மற்றும் தனியார் விவசாய நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக வனக்காடுகள் மற்றும் தனியார் பொறுப்பில் வளர்க்கப்பட்டாலும் அவைகள் வனத்துறையின் உரிய அனுமதிப்படியே வெட்டப்பட வேண்டும். அனுமதியின்றி வெட்டுவதும் கடத்துவதும் தண்டனைக்குரியது.

ஆனால் வனத்துறைக்குத் தெரியாமலேயே விலைமதிப்புள்ள சந்தன மரங்கள், மர்மக் கும்பலால் வெட்டிக் கடத்தப்படுகின்றன. நெல்லை மாவட்டம் அம்பை அருகிலுள்ள பாபநாசம் சித்தர் கோட்டப் பகுதியில் அங்குள்ள சுபாஷ் சந்திர போஸ் என்பவர், தன்னுடைய விவசாயத் தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட லட்சங்களுக்கும் மேலான மதிப்பு கொண்ட நான்கு சந்தன மரங்களை மர்ம நபர்கள் மெஷின் கொண்டு அறுத்து வெட்டிக் கடத்தியுள்ளனர். இது குறித்து சுபாஷ் சந்திர போஸ் வனத்துறையில் தெரிவிக்க, அவர்களோ, போலீசில் புகார் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதையடுத்தே சுபாஷ் சந்திரபோஸ் வி.கே.புரம் போலீசில் புகார்செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்மக் கும்பல் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT