திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

police police

நெல்லை ரெட்டியார்புரத்திலுள்ள வீட்டில் முன்னாள் நெல்லைதிமுகமேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டில் இருந்த பணிப்பெண் மாரிஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் மேயர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அங்குபெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் சொத்து தகராறால் நடந்ததா? கொலையின் பின்னணி என்ன? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.