ADVERTISEMENT

மணல்கொள்ளையை காட்டிக்கொடுததற்காக ஒருவர் அடித்து கொலை!

06:53 PM Nov 30, 2018 | selvakumar

திமுகவை சேர்ந்த ஒருவர் கொள்ளிடத்தில் மணல்திருடுவது குறித்து போலீசுக்குத் தகவல் சொன்னதால் ஆத்திரம் அடைத்த 3 பேர் பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள புலவனுர் சாத்தங்குடியை சேர்ந்தவர் நடேசன்பிள்ளை மகன் மருதவாணன்(50). இவர்குறிச்சி ஊராட்சி திமுக செயலாளராகவும் இருந்துவந்தார். அதோடு டைலர் கடை வைத்து நடத்திவந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் 29 ம் தேதி நள்ளிரவு டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக மணல்மேடு காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்நிலையத்தை சேர்ந்த விவேக்ரவிராஜ் மற்றும் லோகநாதன் ஆகிய உதவி ஆய்வாளர்கள் சென்று கடுவங்குடி என்ற இடத்தில் சென்ற டிராக்டரை மடக்கிபிடித்துள்ளனர். போலிஸை கண்ட டிரைவர் இறங்கி ஓடி தப்பிவிட்டார்.

கொள்ளிடத்தில் திருடப்பட்ட மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த டிராக்டரின் உரிமையாளர் கனகராஜ் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த சேட்டு என்கிற ஜெயக்குமார், ரஞ்சித் ஆகியோர் டிராக்டரை போலீசார் பிடித்ததற்கு திமுக ஊராட்சி செயலாளரான மருதவாணன்தான் காரணம் என எண்ணி, மருதவானனைத்தேடி சென்றுள்ளனர். புலவனூர் தபால்நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த மருதவாணனை 3 பேரும் சேர்ந்து இரும்பு பைப்பால் கொடூரமாக அடித்துள்ளனர், மருதவாணன் இறந்துவிட்டதை கண்டவர்கள் தப்பியோடிவிட்டனர், இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து 3 நபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

"கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது போலீசாரும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடித்து வழக்குப் பதிவுசெய்தும் வருகின்றனர். ஆனால் மணல் திருட்டு குறித்து காவல்துறைக்குச் சொல்லியதால் கொலை செய்திருப்பது இதுதான் முதல்முறையாகும்." என அச்சப்படுகிறார்கள் சமுக ஆர்வளர்கள்.

கொலையான மருதவாணனுக்கு உமா(45) என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் ஒரு பெண்பிள்ளையும் உள்ளனர். தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்ட மகள் துர்க்கா மயிலாடுறை அரசு மருத்துவமனைக்குச்சென்றார். அந்த நேரத்தில் தனது தந்தையின் சடலம் மருத்துவமனைக்கு கொண்டுவந்ததைக்கண்டு கதறி அழுது புறண்டுவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT