நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருட்டு மணல் கும்பலை பற்றி விசாரிக்க இரவில்தனியாக சென்ற காவலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெல்லை மாவட்டம் வள்ளியூரில்நம்பியாற்று படுகையில் மணல் திருடு போவதாக எழுந்த புகாரில் அதுபற்றி ஆய்வு செய்ய இரவில் தனியாக அந்த பகுதிக்கு சிறப்பு பிரிவு காவலர் ஜெகதீசன் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மணல் திருட்டு கும்பல் காவலர் ஜெகதீசை இரும்புக்கம்பியால் அடித்து கொடூரமாக தாக்கிஅவரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
ஆய்விற்கு தனியாக சென்ற காவலர் திரும்பவராததால் மற்ற காவலர்கள் நம்பியாற்று படுகைக்குசென்று பார்த்தபொழுது காவலர்ஜெகதீசன் கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
மேலும் காவலர் ஜெகதீசனின்உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துதிருட்டு மணல்கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});