ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு!

09:12 AM Oct 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று (11/10/2020) நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 22,969 கனஅடியில் இருந்து 24,036 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாகவும், நீர் இருப்பு 62.91 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 22,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT