ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

09:20 AM Oct 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று (28/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,210 கனஅடியில் இருந்து 11,258 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.78 அடியாகவும், நீர் இருப்பு 65.85 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT