ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

08:44 AM Sep 06, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது.

ADVERTISEMENT


இன்று (06/09/2020) காலை நிலவரப்படி,மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 17,790 கன அடியில் இருந்து 11,735 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.26 அடியாகவும், நீர் இருப்பு 54.10 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு 6,000 கன அடியாக உள்ளது. அதேபோல் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 16,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தமிழகத்துக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT