ADVERTISEMENT

பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்

05:48 PM Aug 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தரிசனத்திற்காக வரும் மக்கள் ரோப் கார் அல்லது வின்ச் அல்லது நடைபாதை இவைகளை பயன்படுத்தி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது வழக்கமான நடைமுறைதான். ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச் சேவையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோப் காரில் உள்ள இரும்பு சக்கரங்கள், மின்மோட்டார்கள், இரும்புக் கம்பி போன்றவை பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT