dindigul district palani car incident

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் செம்மடைப்பட்டி என்ற ஊரில் இருந்து பெண் பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு காரில் 5 பேர் வந்து கொண்டிருந்த நிலையில் கரடிக்கூட்டம் என்ற ஊரின் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் வேப்ப மரத்தில் மோதியது.

Advertisment

இதில் காரை ஒட்டி சென்ற மாப்பிள்ளை மணிவேல் மற்றும் காரில் பயணம் செய்த உறவினர்கள் கருப்பணன், நடராஜ், முத்தம்மாள், ஆகிய 4 நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் சிக்கிக் கொண்ட மகாலட்சுமி என்பவரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்து 108 அவசர வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அருகிலிருந்தவர்கள் கூறவே பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவா, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை பார்வையிட்டார்.

Advertisment

மேலும் இறந்தவர்களின் உடல்களை தனியார் வாகனத்தின் மூலம் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்தும் இறந்தவர்களின் தகவல் குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பார்ப்பதற்காக சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மாப்பிள்ளை உயிரிழந்ததால் உறவினர்கள் கதறி அழும் காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கேட்டு சொந்த ஊரான செம்மடைப்பட்டி மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.