ADVERTISEMENT

“மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது” - தமிழக அரசு அறிவிப்பு!

10:58 AM May 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளதால் தளர்வுகள் எதுவுமின்றி பொதுமக்கள் வீட்டுக்குள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவந்தது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறிகள் வீடுகள் தேடிவரும் என்று சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல், குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்டவை விநியோகிக்க இன்று (25.05.2021) முதல் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை அனைத்து நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு ஒரு புதிய தளர்வை அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் அத்தியாவசிய தேவையை மட்டும் கருத்தில்கொண்டு இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT