Ration items must be clean - MK Stalin's order!

ரேஷன் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன் கடந்த 11.06.2021 தேதிமுதல்ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisment

Ration items must be clean - MK Stalin's order!

14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள்அடங்கிய தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட்டநிலையில், இன்றுமுதல் (ஜூன் 15) அரிசி அட்டைதாரர்கள்2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை டோக்கனில்குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சுத்தமானதாக தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைவருக்கும் ரேஷன் அட்டை கிடைக்கவும், போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை தேவை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment