Request Chief Minister give tax exemption Ponniyin Selvan film

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாகவரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசும்போது, "பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி.இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள். நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.